Category Archives: இலக்கியம்

ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது – அ.யேசுராசா – 02

ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட வயதுகளில் இருக்கும் பதின்மவயதினர் அவர்கள் வாழும் சூழலில் ஒரு குழாமாகவோ நண்பர் வட்டமாகவோ ஆகிவிடுவார்கள். ஊரிலுள்ள சனசமூகநிலையங்களில் அந்த அந்தக் குழுக்கள் தனியே தமக்குள் விளையாடிக்கொண்டோ, அரட்டையடித்துக்கொண்டோ இருக்கும். அவர்களுக்குக்கிடையில் இருக்கும் நட்பும் உரையாடலும் புரிந்துணர்வும் மிக வலிமையானதாக இருக்கும். ஒத்த ரசனையோ,விளையாட்டோ ஏதோவொரு விடயம் அந்த நட்பு வட்டத்தின் ஆதார சுழற்சி மையமாக இருக்கும். அது அசாதாரணமானது; நீண்ட நாட்கள் அந்த வட்டத்தில் இருந்தாலும் ஒவ்வொரு தேவை நிமிர்த்தம் வெவ்வேறு வாழ்க்கைச்… Read More »

கோசலை – ரஞ்சகுமார் -01

அப்பாவிடம் இருந்து மகளுக்குக் கிடைக்கும் அன்பென்பது வெளிப்படையானது. அன்பு திகட்டும் பேச்சும் கருணை சொட்டும் விழிப்பரிமாற்றமும் நேரிடையாகவே அப்பாவிடமிருந்து மகளுக்குக் கிடைக்கும். ஆனால், அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அன்பும் பாசமும் வெளிப்படையற்றது. கண்டிப்பும் சரி, கருணையும் சரி அம்மாவின் மூலமே அப்பா, மகனுக்குத் தெரிவிப்பதே எமது சூழலில் அதிகம் நிகழும் பொதுப்படையான உண்மை. அனேகமானவர்களின் வீட்டுச்சூழல் அப்படித்தானிருக்கின்றது. அதேபோல் அம்மாவுக்கும் மகனுக்குமேல் இருக்கும் அன்பும் வெளிப்படையானது. இருந்தும் இரண்டுக்கும் நுண்மையான வித்தியாசம் இருக்கின்றது. அம்மாவின் அன்பு தன்… Read More »

ஆட்டுப்பால் புட்டு – கைம்பொதி விளக்கு

“அமரிக்கக்காரி” என்ற சிறுகதையை ஒரு சஞ்சிகையில் வாசித்தபோது யார் இந்த அ.முத்துலிங்கம் என்று வியப்பாகவிருந்தது. இதற்கு முதல் அந்தப்பெயரைக் கேள்விப்பட்டது கிடையாது. அவர் ஓர் ஈழ தமிழ் எழுத்தாளர் என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது. இதற்கு முன் வாசித்த ஈழ எழுத்தாளர்கள் அவ்வாறான கசப்பான அனுபவத்தையே தந்திருந்தார்கள். ஈழ எழுத்தாளர்கள் மீது கட்டிவைத்த விம்பத்தை அப்போதுதான் கிரனைட் வீசித் தகர்த்தேன். அவர்களால் சிறுகதைகள் எழுத முடியும் என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தது அப்போதுதான். [ஷோபாசக்தி அப்போது அறிமுகமில்லை]… Read More »

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் – பதின்ம வயதின் அற அலைச்சல்

Post-war காலப் பகுதியில் வெளியாகிய பல்வேறு கதைகள் பெரும்பாலும் ஒத்த தன்மைகளைக் கொண்டிருப்பதை அவதானிக்க இயலும். பெரும்பாலான கதைகள் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் நாயகன் முன்னாள் போராளி ஒருவரைத் திருமணம் செய்ய இலங்கைக்கு வருவார்; ஆனால், அவ்வீட்டுக்கு அருகிலிருக்கும் உள்ளூர்வாசியொருவர் பொறாமையில் அம்முன்னாள் போராளியைப்பற்றித் தவறாகச் சொல்ல நாயகன் அதனை நம்பி விட்டுவிட்டு மீண்டும் தான் வாழும் நாட்டுக்குச் செல்வார். (புலம்பெயர்ந்த நாம் உதவிசெய்ய வந்தாலும் உள்ளூர் வாசிகள் விடுவதில்லை என்ற தொனி அதிலிருக்கும்) இல்லையெனில் முன்னாள்… Read More »

மதிப்பீடுகளின் வீழ்ச்சி – ஈழத்து இலக்கிய விமர்சனப்போக்குகள் பற்றிய சில புரிதல்கள்

ஆகஸ்ட் மாதம் வெளியாகிய  தடம் மூன்றாவது இதழில் ஜெயமோகனின் நேர்காணல் குறித்தான விவாதங்களில் மிக அதிர்ச்சி தரக்கூடிய நிலைத்தகவல்கள் சிலவற்றை முகநூலில் கண்ணுற்றேன். ‘தமிழக இலக்கியவாதிகள் போனால் போகட்டும் என்று ஷோபாசக்தி, அ.முத்துலிங்கம் என்று ஓரிருவரை அங்கீகரித்தவர்கள், இன்று சயந்தன், குணா கவியழகன், யோ. கர்ணன், தமிழ்நதி என்று வெளிக்கிளம்பி வரும் படைப்பாளிகளை ஓர் ஒவ்வாமையோடு பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஜெயமோகனுக்கு நன்கு தெரியும், இன்றைக்கு ஈழத்துப் படைப்பாளிகள் உருவாக்கக் கூடிய படைப்புகளை, அவை காட்டும் உலகத்தைத் தம்மால்… Read More »

தேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்!

பெண்களின் வாழ்க்கை முறை பெண்களினாலே தீர்மானிக்கப்படுகின்றது. எமது தமிழ் குடும்பச்சூழலில் பெண் எவ்வாறு புழங்கவேண்டும் என்பதை உண்மையில் யார் தீர்மானிப்பது என்று உற்றுப்பார்த்தால் அவளின் தாயாகவும் அவனைச் சார்ந்த பெண்களாகவும் இருப்பார்கள். பொதுவாக அப்பாவுக்கும் மகளுக்குமான உறவு மிகயியல்பானது. ஆனால், தாய்க்கும் மகளுக்கும் இடையிலான உறவு மிக இறுக்கமானதும் அந்தரங்கமானதுமாக இருந்துவிடுவதுண்டு. ஆண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும், பெண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும் என்பதை மென்மையாகவும் கடுமையாகவும் சொல்லிச் சொல்லி வளர்ப்பதில் பெரும்பங்கை செலவழிப்பதது… Read More »