Category Archives: வாசிப்பு

இரண்டு சிறுகதைகள்

1 காலம் இதழில் ‘சிறில் அலெக்ஸ்’ ‘ஒரு ருமேனியனுடன் உரையாடுவது எப்படி?’ என்ற குறுங்கதையை இங்கிலாந்தை மையப்படுத்தி எழுதி இருக்கிறார். ருமேனியர்கள் என்றில்லாமல் பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் ஐரோப்பியர்களும், ஏனையவர்களும் தான் அதிகமான உடல் உழைப்பு கூடிய வேலைகளைச் செய்கிறார்கள். தொழிற்சாலைகள், பண்ணைகள் என்று எங்கும் அவர்களைக் காணவியலும். பூர்விக ஆங்கிலேயர்கள் உடல் உழைப்பை அதிகம் கொடுக்க தயங்குபவர்களாக இருக்கிறார்கள். வருவாய் குறைந்தாலும் மாநகரசபை அடிப்படை செலவுகளைப் பொறுப்பு ஏற்கும் என்பதால் அதிகம் பொருளாதாரம் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. படையெடுக்கும்… Read More »

ஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து

நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன், விவாதிக்கிறவன். அதிலிருந்து தான் கலை, இலக்கியம் மீதான எனது பார்வையை நான் உருவாக்கிக் கொள்கிறேன். “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” – ஷோபாசக்தி ஈழ இலக்கியம் என்று ஆரம்பித்தாலே இரண்டு பெயர்களைத் தவிர்க்கவே இயலாது. முதன்மைப் படைப்பாளிகள் வரிசையில்… Read More »

கள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா

தாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு பண்பாட்டின் சிறுதுளி. அவன் எங்கு சென்றாலும் தனது பண்பாட்டை சுமந்துகொண்டே செல்வான். அப்பண்பாடு அகத்தில் புதைந்து -அவனுக்குள்ளே தூங்காமல் – நெளிந்தவாறே இருக்கும். செல்லும் இடத்தில் அவன் எதிர்நோக்கும் பண்பாட்டுடன் அவனுள்ளே புதைந்திருக்கும் அவனது பண்பாடு விழித்து மோதும். இந்த இரண்டு… Read More »

உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’

அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும் வகையில் சொல்லிச் சென்றிருக்கும். இந்தப் புன்னகைக்க வைக்கும் தன்மைதான் அப்புத்தகத்தின் வெற்றியோ என்று கூட தோன்ற வைக்கும். பால்யத்தை மீட்டிப் பார்க்கும் போது இனிமையான சம்பவங்கள் சட்டென்று முதலில் நினைவுக்கு வரும்; பின்னர் மெல்ல மெல்ல அந்த நினைவுகளைக் கடந்து கசப்பான… Read More »

பிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்

1 இலக்கிய வகைப்பாடுகள் அவசியம் தேவைதானா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். அவற்றைப் பிரிவினைக்குள் உட்படுத்துவதற்கு புறவயத் தேவைகள் இல்லை. எனினும் வாசிப்பின் இலகுவுக்கும், மேலதிகமான புரிதலுக்கும் இலக்கியத்தின் வகைப்பாடுகள் தேவையாகத்தான் இருக்கின்றன. விமர்சினரீதியாக ஒரு படைப்பை அணுகுவதற்கும் வகைபாடுகள் தேவையாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இங்கேயே பன்மைத்துவமான அழகியல் சாத்தியங்களை கருத்தில்கொள்ளவும் இயலும். புகலிட இலக்கியம் என்றால் என்ன? எந்தப் பண்புகளின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தலாம் என்பதற்கான விடைகள் இன்னும் தீர்க்கமாக நம்மிடம் இல்லாவிடினும், இலங்கையில்… Read More »

அனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

ஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி.. அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உண்டு. குடும்பத்தின் கடைசிப் பொடியன் நான்தான். பிறந்தது வளர்ந்தது யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை எனும் ஊரில். எனினும் எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது, 1995-ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு நிகழ்ந்தது. கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக எனது வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது. எனது பதின்ம வயதின் இறுதியில் போர்… Read More »

அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – சுனில் கிருஷ்ணன்

அனோஜன் பாலகிருஷ்ணன் தொண்ணூறுகளில் பிறந்து எழுத வந்த ஈழத்து எழுத்தாளர். ஈழத் தமிழுக்கு உட்கிடங்காகவே ஓசை நயமும் அழகும் இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அனோஜன் பயன்படுத்தும் ‘புகையிரதம்’ எனும் சொல் ஒரு உதாரணம். ஈழ எழுத்தாளர்களுக்கு தமிழக எழுத்தாளர்களைக் காட்டிலும் உக்கிரமான வாழ்வனுபவங்கள் அதிகம். அதன் அமைதியின்மை துரதிர்ஷ்டவசமானதே. ஹெமிங்க்வே, போர் ஆபத்தானதுதான், ஆனால் படைப்பூக்கத்திற்கு மிகவும் சாதகமானது, என்கிறார். தலைமுறைகளாக நீண்ட போர், கிளர்ச்சிகள் தமிழக எழுத்தாளர்கள் அடைய முடியாத அனுபவங்களை அவர்களுக்கு… Read More »

போகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் தொகுப்பை வாசித்து முடித்தபின் உடனடியாக எனக்குத் தோன்றியது பதற்றம் சுரக்கும் புதிர் நிறைந்த துயர்தான். சிக்காகிய நூல் பந்திலிருந்து நூலை விடுவிப்பது போல இந்தத் துயர் கழன்று கழன்று மேலும் சிக்காகியது. போகன் சிருஷ்டிக்கும் உலகம் மிதந்தலையும் துயருக்குள் புறக்கணிப்பின் விளிம்பில் சுரக்கும் தாழ்வு மனப்பான்மையாலும் அன்பின் நேர்மறை சிடுக்குகளுக்குள் சிக்குண்டு அவஸ்தைப்படுபவர்களின் பதற்றம் கொண்ட அகவுலகத்தாலும் நிரம்பியுள்ளது. ஒருவகையில் அம்மானுடர்கள் அவ்விருத்தலை தத்தளிப்புடன் சிறுதயக்கத்துக்குப் பின் ஏற்கவும் செய்கிறார்கள். ‘பாஸிங் ஷோ’… Read More »

லெனின் சின்னத்தம்பி

என்னுடைய பல்கலைக்கழக இரசாயன ஆய்வுகூடத்தில் ஆய்வொன்றைச் செய்தோம். சில மூலப்பொருட்களை நீரில் கரைத்துவிட்டு கரைந்த மூலப்பொருட்களின் இயல்பை நீரில் ஆராய்ந்தோம். நீரின் மூலக்கூற்றின் இயல்பை அவை எடுத்தன. ஆனால், எப்போதும் நீரின் இயல்பில் அவற்றால் இருக்கமுடியவில்லை. சில இடங்களில் தங்கள் சுய ரூபத்தைக் காட்டின. உண்மையில் அவை பாவனைதான் செய்கின்றன. ஓர் அந்நிய நாட்டில் புலம்பெயர்த்து வசிக்கக்கூடிய ஒரு தொகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளும் ஏறக்குறைய இவ்வாறான ஒன்றுதான். அங்கே பூர்வீகமாக வாழும் மக்களின் வாழ்க்கை, பண்பாட்டுச்… Read More »

ஒரு கோப்பை காபி

“ஒரு கோப்பை காபி” சிறுகதை விகடன் இதழில் வாசித்தேன். இந்த வருடம் முடியும் தருவாயில் ஏதோவொரு மூலையில் சோர்வுகள் ஆட்கொள்ளச் சுருங்கியிருந்த சமயம் இக்கதை மிகப்பெரிய மனத் திறப்பைத் தந்தது. இக்கதை பற்றியே நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன். மிக நேரடியாகக் கதை ஆரம்பிக்கிறது. எளிமையான சித்தரிப்பு. ஒரு வேகமான வாசிப்பில் ஒரு கோப்பியை ஆறவிடமுன் குடிப்பதுபோல சடாறென்று முடித்துவிடலாம். ஆனால், இதன் ஆழம் மிகமிக அதிகமானது. பல்வேறு சுழிப்புகளும் சிடுக்குகளும் கொண்டது. தன்னை வலிமையானவனாக நினைத்துக்கொள்ளும் ஆண்… Read More »