Monthly Archives: March 2016

தாரே ஸமீன் பார்

விதிவிலக்காக நல்ல திரைப்படங்கள் ஹிந்தியில் வருவதுண்டு. அப்படி வருவதில் சில படங்கள் மட்டுமே அதிஷ்டவசமாகப் பார்கக் கிடைக்கும். அப்படிப் பார்த்தில் சிலாகிக்கக் கூடிய திரைப்படம்தான், 2007 இல் வெளிவந்த தாரே ஸமீன் பார். அமீர்கான் மீது தனிப்பட்ட நம்பிக்கை எனக்கு அவரது சமூகச் செயல்பாடுகளை ஓட்டி இருகின்றது. இப்படத்தின் குறுவட்டு கைக்குவந்தபோது எந்த நம்பிக்கையும் இன்றி – முன் எடுகோள்கள் எதுவும் இன்றி – பார்க்கத் தொடங்கினேன். வசதியான பொருளாதார நிலையினைக் கொண்ட குடும்பத்தில் – அப்பா,அம்மா,அண்ணாவோடு… Read More »

ஆதிரை – ஒரு பக்கப் பெண்களின் கண்ணீர்

ஈழத்து நாவல்களில் என்ன விசேடமாக இருந்துவிடப்போகின்றது என்ற பிரக்ஞை பெரும்பாலானோர்க்கு இருப்பதுண்டு. ஓலம் ஒப்பாரி கண்ணீர் மீண்டும் மீண்டும் மரணம் என்றே பேசிக்கொண்டிருக்கும். ஈழம் வலிகளினாலும் ஓலத்தினாலும் நிரம்பியது. நாம் சந்தித்த கண்ணீர் முடிவற்றது. கொடுத்த தியாகங்கள் கற்பனைக்கு எட்டமுடியாத பிரமாண்டமானவை. இவற்றின் தரவுகளும் வலிகளும் எம்மிடம் ஏராளம் உண்டு. கடந்து வந்த வாழ்க்கையினை ஏதோவொரு விதத்தில் பதித்து வரலாற்றில் ஒப்பேற்றிவிட மனம் விரும்பிக்கொண்டிருக்கும். இவற்றைக் கட்டுரைகளாக எழுதுவதிலும் பார்க்க கதை சொல்லலாக சொல்வதிலே அதிகமான தரப்பினரிடம்… Read More »

சிறுவர்களுக்கான திரைப்படங்களும் மியாசகியும்

சிறுவர் சினிமா என்றால் சிறுவர்கள் நடிக்கும் சினிமா என்ற அபிப்பிராயம் நம்மில் பலருக்கு இருகின்றது. அது தவறான புரிதல். சிறுவர் சிறுவர்களுக்குரிய சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவை சிறுவர்களின் கனவுகளையும், கற்பனைகளையும் காட்சிப்படுத்தி அதன் வழியே அவர்களின் உலகம் எப்படித் தென்படுகிறது என்பதை வெளிப்படுத்தவேண்டும். சிறுவர்கள் உலகை புறவயமாகவும் அகவயமாகவும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், தங்களது ஆசைகள் அபிலாஷைகள் எவ்வாறு பெரியவர்களால் பாதிப்படைய வைக்கப்படுகின்றது என்பதை அவை தெளிவாக ஒப்பேற்ற வேண்டும். அவையே சிறுவர்… Read More »