Monthly Archives: June 2016

சிங்கிஸ் ஜத்மாத்தவ்வின் ஜமீலா – குறுநாவல்

ஜமீலா என்ற சோவியத் குறுநாவலை சமீபத்தில் கிடைத்த இடைவெளியில் வாசித்தேன். வாசித்து முடித்தபின் பல்வேறு கேள்விகளை மனதின் அடியாழத்தில் கொந்தளிக்க வைத்தவாரிருக்கின்றது. ஒழுக்க மீறல்கள் எகச்கமாக எமது பண்பாட்டில் நிகழும்போதும், அதனைக் கேள்வியுறும்போதும் ஏற்படும் மெல்லிய அதிர்ச்சிகள் அதிகம் எம்மை யோசிக்கவைப்பதில்லை. நாம் வகுத்துக்கொண்ட அறம், கூட்டுச்சமூகத்தில் சிலரால் மீறப்படும்போது அதற்கான காரணக் காரணியங்களைத் தகுந்த உளவியலோடு அணுகமுடிவதில்லை. வெறுப்பை அவர்கள் மேல் உமிழ்திவிட்டு நகர்ந்துவிடுகின்றது மனம். சமூகத்தில் அறம் தவறியவர்களாகக் கருதுபவர்களின் அவர்பக்க நியாயங்களை அவர்பக்கத்தில்… Read More »