Tag Archives: அனுபவம்

சிங்கிஸ் ஜத்மாத்தவ்வின் ஜமீலா – குறுநாவல்

ஜமீலா என்ற சோவியத் குறுநாவலை சமீபத்தில் கிடைத்த இடைவெளியில் வாசித்தேன். வாசித்து முடித்தபின் பல்வேறு கேள்விகளை மனதின் அடியாழத்தில் கொந்தளிக்க வைத்தவாரிருக்கின்றது. ஒழுக்க மீறல்கள் எகச்கமாக எமது பண்பாட்டில் நிகழும்போதும், அதனைக் கேள்வியுறும்போதும் ஏற்படும் மெல்லிய அதிர்ச்சிகள் அதிகம் எம்மை யோசிக்கவைப்பதில்லை. நாம் வகுத்துக்கொண்ட அறம், கூட்டுச்சமூகத்தில் சிலரால் மீறப்படும்போது அதற்கான காரணக் காரணியங்களைத் தகுந்த உளவியலோடு அணுகமுடிவதில்லை. வெறுப்பை அவர்கள் மேல் உமிழ்திவிட்டு நகர்ந்துவிடுகின்றது மனம். சமூகத்தில் அறம் தவறியவர்களாகக் கருதுபவர்களின் அவர்பக்க நியாயங்களை அவர்பக்கத்தில்… Read More »

தாரே ஸமீன் பார்

விதிவிலக்காக நல்ல திரைப்படங்கள் ஹிந்தியில் வருவதுண்டு. அப்படி வருவதில் சில படங்கள் மட்டுமே அதிஷ்டவசமாகப் பார்கக் கிடைக்கும். அப்படிப் பார்த்தில் சிலாகிக்கக் கூடிய திரைப்படம்தான், 2007 இல் வெளிவந்த தாரே ஸமீன் பார். அமீர்கான் மீது தனிப்பட்ட நம்பிக்கை எனக்கு அவரது சமூகச் செயல்பாடுகளை ஓட்டி இருகின்றது. இப்படத்தின் குறுவட்டு கைக்குவந்தபோது எந்த நம்பிக்கையும் இன்றி – முன் எடுகோள்கள் எதுவும் இன்றி – பார்க்கத் தொடங்கினேன். வசதியான பொருளாதார நிலையினைக் கொண்ட குடும்பத்தில் – அப்பா,அம்மா,அண்ணாவோடு… Read More »