Monthly Archives: July 2016

மூன்றாம் நதி

தொடர்ச்சியாக இணையத்தில் வாசிப்பவர்களுக்கு வா.மணிகண்டனை தெரியாமல் இருப்பது ஆச்சர்யமிக்கதொன்றாகவே இருக்கும். நிசப்தம் வலைத்தளத்தில் சளைக்காமல் எழுதிக்கொண்டு இருப்பவர். அதே நேரத்தில் நிசப்தம் அறக்கட்டளை மூலம் எண்ணற்ற உதவிகளைத் தேவையானவர்களுக்குச் செய்துகொண்டிருப்பவர். தினமும் வலைத்தளத்தில் எழுதுவதற்கு அவருக்கு விடயங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். எப்படி எழுத்துப்பிழைகள் இல்லாமல் வேகவேகமாகத் தட்டச்சு செய்யது இணையத்தில் தினமும் இரண்டு மூன்று கட்டுரை என்று எழுத முடிகிறது என்று ஆர்ச்சர்யமகவே இருக்கும். கவிதைகள் எழுதுவதிலும் கவிதைகளுக்கு மதிப்பீடு எழுதுவதிலும் நிறையப் பக்கங்களைச் செலவழித்தவர். இவரது… Read More »

குடை நிழல்

தி ஹிந்து நாளிதழில் மண்குதிரை எழுதிய “குடை நிழல்” குறுநாவலின் மதிப்பீட்டை வாசித்துவிட்டு, அக்குறுநாவலை மிகச்சமீபத்தில்தான் வாசித்தேன். தெளிவத்தை ஜோசப் மிகமுக்கிய கதை சொல்லி என்பதில் சந்தேகமேயில்லை. மிக நேரடியான மொழியில் சொல்லிவிட்டுச் செல்லும் சம்பவ சித்தரிப்புகள். இத்தனை நேரடியான யதார்த்தவாத சித்தரிப்பு தேவையா என்றால் அதுவே இக்குறுநாவலின் அழகியலாகவும் பலமாகவும் இருந்துவிடுகின்றது. கைது விசாரணைகள் என்று வரும்போது நாயகனுக்கு நேரும் அனுபவத்தைவிட அவன் கேள்விப்பட்ட அனுபவம்தான் இம்சிக்க வைகின்றது. எத்தனை எளிமையாக ஒருவனை வீழ்த்த முடிகின்றது.… Read More »

பஞ்சபூதம்

பஞ்சபூதம் வெறும் 32 பக்கங்களில் சாஜித்தினால் எழுதப்பட்ட நாவல். இலங்கை தமிழ் இலக்கியப்பரப்பிலிருந்து வெளியாகும் நாவல்களின் வழமையான மரபார்ந்த கதையாடலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆக்கம் பஞ்சபூதம். சர்ரியலிசத் தன்மைக்கான கூறுகளை அதிகம் கொண்டிருக்கின்றது. இவ்வாறான வடிவ பரிசோதனைகள் இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் ஓரளவுக்கு ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டிருந்தாலும், நான் வாசித்தவரையில் யதார்த்தவாதத்திலிருந்து மீறி சர்ரியலிசமும் மேஜிக்கல் ரியலிசத்தின் கூறுகளையும் ஒருங்கே கொண்டு நாவல் வடிவில் எழுதப்பட்டதில் இதுவே இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் முதலாவதாக இருக்கவேண்டும். ஆழமான நித்திரையில்… Read More »

அடர் பனிக் குளிரின் பயங்கரம் – எவரெஸ்ட்

திரையனுபவம் நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையுச்சிக்குப் பயணிக்கும் பயணிகளின் உணர்வுபூர்வமான கதையினைக்கொண்ட ஆங்கிலக் கதைப்படம் எவரெஸ்ட். 1996 – இல் நடந்த திகிலூட்டக்கூடிய விபத்து ஒன்றின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, திரைப்படமாகப் படமாக்கியுள்ளார்கள். எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வந்திறங்கியிருக்கும் குழுவின் அறிமுகத்தோடு திரைப்படம் ஆரம்பிக்கின்றது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் சிநேகமாக அறிமுகமாகிக் கொள்கிறார்கள். மிக உயரமாக எழுந்து நிற்கும் எவரெஸ்ட் சிகரத்தை திறந்த விழிகளுடன், பரவசமாகப் பார்கிறார்கள். சில்லென்று குளிர் காற்று சீண்டுகின்றது. திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும்… Read More »