Monthly Archives: April 2016

ஜூட் – சிறுகதை

வீதியிலே எப்போவும் நிற்கும் அந்த நாய், உற்றுப்பார்க்க கொஞ்சம் பயங்கரமாகவே தோன்றும். குறுக்காகவும் நெடுக்காகவும் வீதியைக்கடந்து எப்பவும் ஓடிக்கொண்டிருக்கும். மண்ணிறத்தில் நுனிவாலில் வெள்ளை நிறத்துடன் அந்தநாய் இருந்தது. எப்போதும் ஊட்டத்துடன் ஜொலிப்பாகவே ரௌத்திரமாக திரியும். குறுக்காக போய்வரும் சைக்கிள்களை மட்டுமல்லாது போய்வரும் மோட்டார் சைக்கிள்களையும் நாக்கில் எச்சில் வழிந்து ஒழுகிக்கொண்டிருக்க கால்தொடைகள் படபடக்க பின்னால் மூர்க்கமாக துரத்தும். இந்தநாயின் உபத்திரத்தினால் அவ்வீதியில் ஆட்கள் செல்வது குறைந்து கொண்டிருந்தது . கீர்த்தனாவுக்கு இந்த நாய் கிடைத்தது சுவாரசியமான வரலாறு… Read More »