Category Archives: பிரதி மீது

ஒரு றெயில் பயணம் – குப்பிழான் சண்முகன் – 10

மிகுந்த சிக்கலும், புதிரும், எதிர்பாராத திருப்பங்களும் நிகழும் வாழ்க்கையின் நகர்வின் தடுமாற்றத்தில் சிக்கியிருக்கும் போது, மனதுக்கு நெருக்கமானவர்களின் அணுக்கம் காரணமாகப் பல இடங்களில் வாழ்கையின் தருணங்கள் அழகாகத் தோன்றுகின்றன. வெட்டி எடுக்கப்பட்ட ஐஸ் துண்டை உள்ளங்கையில் வைத்திருப்பது போல் மிகுந்த குளிர்ச்சியான தருணங்கள் அவை. இது எதிர்பாலின் மீதும் வரலாம், சகபாலின் மீதும் வரலாம். அவை அன்பு, ஆறுதல் எனும் ஏக்கங்களின் சுழற்சியில் இயல்பாக எழக்கூடிய சுழிகள். எத்தனையோ நபர்களுடன் அதிகம் அளவளாவினாலும் சிலரை அகவயமான உணர்வுகளின்… Read More »

வெள்ளிப் பாதசரம் – இலங்கையர்கோன் – 09

கோவம் எழும் உந்துதல் கணம் சட்டென்று பெரும் விசையுடன் எழும்போது சுற்றியிருக்கும் அணைத்துத் தற்காலச் சூழலும் மறந்துபோகும். எமக்கு மிகப்பிடித்தவர்களைக் கூட மிகுந்த கோவத்துடன் எம் நிலை மறந்து சில இடங்களில் வசைச் சொற்களால் பேசியிருப்போம். அந்த இடங்களில் அவ்வாறு பாவனைச் செய்திருக்கக்கூடாது என்பது உறைக்கும்போது, எல்லாமே மாறியிருக்கும். மிக மனம் நோகடித்துப் புண்படுத்தியிருப்போம். அனைத்தும் தலைகீழாக உருமாறியிருக்கும். இலங்கையர்கோன் எழுதிய ‘வெள்ளிப் பாதசரம்’ சிறுகதை அவ்வாறான நெருக்கடி ஒன்றை கண்முன்னே சித்தரிக்கின்றது. மிகப் பிரமாண்டமாக நிகழும்… Read More »

பாத்திரம் – ஐ.சாந்தன் – 08

நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்கவேண்டும் என்றே விரும்புவோம். அவை பிழைக்கும் போது கடுமையான மனச்சோர்வு சுற்றிப்பிடிக்கும். இந்த அழுத்தங்களில் இருந்து வெளியேற உள்மனம், முன்னம் எடுத்த முடிவு ஏன் பிழைத்தது? நான் எடுத்த முடிவு உண்மையில் பிழையா? தவறு நம்பக்கமா? ச்சே ச்சே இல்லை; என் பக்கம் அவ்வாறு இல்லை என்று ஓயாமல் அரற்றிச் சமாதானப்படுத்த காரணங்களைத் தேடும். அதே போல் ஏமாற்றப்படும்போதும் அந்த அவமானகரமான வலியில் இருந்து வெளியேற மனம் ஒரு காரணத்தைத்… Read More »

பொரிக்காத முட்டை – பவானி – 07

வெவ்வேறு நேர இக்கட்டுகளில், சமநிலை குலைந்திருக்கும் சமயத்தில் ஏற்படும் அழுத்தத்தில் எழும் பயங்கள் மிக எளிமையான காரணங்களில் உருவாகியவைகாய இருக்கும், அவ்வாறான அழுத்தங்கள் கரைந்து போனபின் இப்படியெல்லாம் சிந்தித்து பயந்தோமா என்று நகைச்சுவையாகவே திரும்பத் தோன்றலாம். இருந்தும் அழுத்தங்கள் உருவாகும் தருணங்களில் நாம் முற்றிலும் பிறிதொருவராகவே தோன்றுவோம். அழுத்த அலைகள் ஓயும் போதே சமநிலையும் யதார்த்தமும் எஞ்சும். பெண்களின் உள்ளம் கர்ப்பகாலத்தில் எப்போதுமே பிறக்கப்போகும் குழந்தை பற்றிய கனவுகளில் மிதக்கும். அச்சூழலில் அவர்களின் மனம் பல்வேறு அழுத்தங்களில்… Read More »

தோணி – வ.அ.இராசரத்தினம் – 06

சிறுவயதில் என்னவாக ஆக விரும்பினேன் என்று எனக்குள்ளே நான் கேட்கும் போது ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொன்றை விரும்பியிருந்தது நினைவுகளில் வருகின்றது. இருந்தும் ஏதோவொரு லட்சியம் ஆழமானதாக மனதுக்கு மிக நெருக்கமானதாக இருந்துவிடுகிறது. வழி தவறியோ விரும்பியோ விரும்பாமலோ நாம் வேறொரு துறைக்குள் நுழைந்து அதிலே சுழன்று வாழ்ந்து எல்லாம் சரியாகச் செல்கிறது என்ற திருப்தியில் இருக்கும்போது திடீரென்று இது எனக்குரிய துறையில்லை; இது நான் விரும்பியதில்லை என்று தெரியவரும். நினைவுகளையும் ஏக்கங்களையும் பிசைந்து ஒருவிதமான மந்தமான மனநிலைக்கு… Read More »

கோட்டை – மு.தளையசிங்கம் – 05

அறங்களாக வகுத்துக்கொண்டதை மீறும் போது ஏற்படும் குற்றவுணர்வின் இடைஞ்சல்களைக் களைவது ஒரு சவால்தான். மீறல்களை எவ்வளவு விரைவாக நிகழ்த்த முனைந்தாலும் குற்றவுணர்வு வேகத்தடையை ஏற்படுத்தும். இந்தக் குற்றவுணர்வு என்பது வகுத்துக்கொண்ட அறங்களை நம்புவதிலும் பின்பற்றுவதிலுமுள்ள அதீத ஈடுபாட்டால் உருவாவது. வலிமையாக அறத்தை நம்பினாலும், சில இடங்களில் அதனை மீற அதை நம்பிய மனித மனம் துடிக்கிறது. சமூகத்தில் இடம்பெறும் நம்மவியலாத பாலியல் உறவுமுறைகள்கூடப் பல சமயம் செய்திகளாக அறிந்துகொள்ளும்போது அறங்களுக்கு நன்கு பழகிய மனிதமனம் திடுக்கிடுகிறது. இது… Read More »

சந்திரிகை – முனியப்பதாசன் – 04

எதிர்ப்பாலின் மீதான கவர்ச்சி ஏதோவொரு புள்ளியில் ஆரம்பித்தாலும், அதற்கு வயது வித்தியாசம் என்பதும் கிஞ்சித்தும் இருப்பதில்லை. மிகச்சிறிய வயதிலே நமக்கு அழகானவர்களாகத் தோன்றுபவர்களை வியந்து மெய்மறந்து பார்த்திருப்போம், ரசித்திருப்போம்; ஏதோவொரு கவர்ச்சியும் ஈர்ப்பும் உள்ளிர்த்துக் கொண்டேயிருக்கும். அந்த ஈர்ப்பு எந்தவித காமம் சார்ந்த கிளர்தலையும் நகர்த்தியிருக்காது. ஆனால், எம்மை அறியாமலே அதற்குரிய ரசாயன மாற்றங்களை உள்ளுக்குள் நிகழ்த்தியும் இருக்கலாம். ஒவ்வொரு வயது படிகளிலும், நெருக்கமான உறவு இன்னுமொருவருடன் இருக்கும்போதோ அல்லது இல்லாமல் இரும்கும்போதோ ஏற்படும். இவ்வாறான எதிர்ப்பாலின்… Read More »

மாற்றம் – சட்டநாதன் – 03

புனிதம் அற்ற உறவுகள் என்று நமது சமூகத்தில் ஒதுக்கப்ட்டு இழிவாகப் பார்க்கப்படும் ஒவ்வொரு உறவுகளுக்கும் தொடுப்புகளுக்குப் பின்பும் ஒவ்வொரு உணர்வு சார்ந்த நெகிழ்வான கூரிய காரணங்களும் இருக்கும். திருமணம் என்ற ஒழுக்கு இருவருக்கு இடையிலான அன்பையும்,நேசத்தையும்,உதவிகளையும் ஒன்றையொன்று இட்டு நிரப்பும்; இருந்தும் இந்த ஒழுக்கில் சிறிய பகுதி தவறி அந்த இடைவெளி வளர அதை வேறொரு துண்டு நிரப்பிவிடலாம். இரண்டு அணுக்கள் இலத்திரன்களைப் பங்கிடுவது போல அது சட்டென்று நிகழ்ந்து விடலாம். மனித வாழ்க்கை என்பதே உடல்,உளம்… Read More »

ஆட்டுப்பால் புட்டு – கைம்பொதி விளக்கு

“அமரிக்கக்காரி” என்ற சிறுகதையை ஒரு சஞ்சிகையில் வாசித்தபோது யார் இந்த அ.முத்துலிங்கம் என்று வியப்பாகவிருந்தது. இதற்கு முதல் அந்தப்பெயரைக் கேள்விப்பட்டது கிடையாது. அவர் ஓர் ஈழ தமிழ் எழுத்தாளர் என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது. இதற்கு முன் வாசித்த ஈழ எழுத்தாளர்கள் அவ்வாறான கசப்பான அனுபவத்தையே தந்திருந்தார்கள். ஈழ எழுத்தாளர்கள் மீது கட்டிவைத்த விம்பத்தை அப்போதுதான் கிரனைட் வீசித் தகர்த்தேன். அவர்களால் சிறுகதைகள் எழுத முடியும் என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தது அப்போதுதான். [ஷோபாசக்தி அப்போது அறிமுகமில்லை]… Read More »

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் – பதின்ம வயதின் அற அலைச்சல்

Post-war காலப் பகுதியில் வெளியாகிய பல்வேறு கதைகள் பெரும்பாலும் ஒத்த தன்மைகளைக் கொண்டிருப்பதை அவதானிக்க இயலும். பெரும்பாலான கதைகள் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் நாயகன் முன்னாள் போராளி ஒருவரைத் திருமணம் செய்ய இலங்கைக்கு வருவார்; ஆனால், அவ்வீட்டுக்கு அருகிலிருக்கும் உள்ளூர்வாசியொருவர் பொறாமையில் அம்முன்னாள் போராளியைப்பற்றித் தவறாகச் சொல்ல நாயகன் அதனை நம்பி விட்டுவிட்டு மீண்டும் தான் வாழும் நாட்டுக்குச் செல்வார். (புலம்பெயர்ந்த நாம் உதவிசெய்ய வந்தாலும் உள்ளூர் வாசிகள் விடுவதில்லை என்ற தொனி அதிலிருக்கும்) இல்லையெனில் முன்னாள்… Read More »