Category Archives: யாழ்பாணம்

அலைதலும் எழுத்தும்

பொதுவாகத் தொண்ணூறுகளின் பின்னர் பிறந்தவர்களை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள் என்ற கோட்டில் இருபிரிவாகப் பிரிக்கலாம். நான் இராணுவக் கட்டுப்பாடுப் பகுதியிலே வளர நேர்ந்தது. எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது அதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் பட்டினம் இராணுவத்தின் நுழைவால் முற்றிலும் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஏறக்குறைய ஐந்துலட்சம் மக்கள் யாழிலிருந்து வெளியாகி கொடிகாமத்தைத் தாண்டி வன்னிப்பகுதி நோக்கி இடம்பெயர்ந்தார்கள். ஒருவகையில் விடுதலைப்புலிகளினால் நிர்ப்பந்திக்கப்பட்ட இடம்பெயர்வு அது. அரியாலையில் வசித்த எங்கள்… Read More »

நியோகா

நியோகா திரைப்படத்தை இறுதியில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படம் இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் எழுத்தாளரும் நடிகரும் குறும்பட இயக்குநருமான சுமதி பலராமனால் எழுதி இயக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமாகும். போருக்குப் பின்பான விளைவுகளைப் பேசும் இலக்கியங்கள் ஓரளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. ஆனால், காண்பியக் கலையில் அவற்றைப் பேசுவது தற்பொழுதுதான் ஓரளவுக்கு அதிகரிக்கின்றது. நியோகா திரைப்படமும் போருக்குப் பின்பாக இடைவிடாது துரத்தும் துன்பமான விளைவு ஒன்றைப் பெண்களின் உணர்வுத் தளத்திலிருந்து பேசுகின்றது. மலரின்… Read More »

மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம் – வன்முறையின் முட்கள்

யதார்த்தனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம்’. தொண்ணூறுகளுக்குப்பின் பிறந்து எழுத ஆரம்பித்த தலைமுறையைச் சேர்ந்தவர் யதார்த்தன். யதார்த்தன் தன் சிறுவயது பிராயத்திலிருந்து பதின்ம வயது இறுதிவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வாழ்ந்தவர். இறுதியுத்தத்தின் விளிம்புவரை சென்று மீண்டு முகாம் வாழ்க்கையைக் கழித்து, தற்போது பல்கலைக்கழக மாணவராக இருக்கிறார். இணைய வெளியில் எழுத ஆரம்பித்துப் படிப்படியாக இலங்கை சிற்றிதழ் சூழலுக்குள் வந்தவர். ஆரம்பத்தில் கவிதை உருவாக்கத்தில் ஈடுபட்டு பிற்பாடு கதைகள் எழுதுவதில் அதிகநேரத்தை செலவழிக்க… Read More »

கோசலை – ரஞ்சகுமார் -01

அப்பாவிடம் இருந்து மகளுக்குக் கிடைக்கும் அன்பென்பது வெளிப்படையானது. அன்பு திகட்டும் பேச்சும் கருணை சொட்டும் விழிப்பரிமாற்றமும் நேரிடையாகவே அப்பாவிடமிருந்து மகளுக்குக் கிடைக்கும். ஆனால், அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அன்பும் பாசமும் வெளிப்படையற்றது. கண்டிப்பும் சரி, கருணையும் சரி அம்மாவின் மூலமே அப்பா, மகனுக்குத் தெரிவிப்பதே எமது சூழலில் அதிகம் நிகழும் பொதுப்படையான உண்மை. அனேகமானவர்களின் வீட்டுச்சூழல் அப்படித்தானிருக்கின்றது. அதேபோல் அம்மாவுக்கும் மகனுக்குமேல் இருக்கும் அன்பும் வெளிப்படையானது. இருந்தும் இரண்டுக்கும் நுண்மையான வித்தியாசம் இருக்கின்றது. அம்மாவின் அன்பு தன்… Read More »

மொழி மானமும் தமிழ் மனநிலையும்!

எம் இனம் சார்ந்து இருக்கும் அக்கறையில் எனக்குப் பல கேள்விகள் எழுவதுண்டு. முக்கியமாக எம் இனத்துக்கு இருக்கும் தாழ்வுச் சிக்கல். அந்தத் தாழ்வுச் சிக்கலை மறைக்க எம்மிடம் எம் இனம் சார்ந்து உருவாக்கப்பட்ட வரலாற்று ரீதியான பாரிய விம்பங்கள் அறிவுரீதியாக யோசிப்பதை எப்பொழுதும் இடையூறு செய்கின்றன. அதன் வெற்றுப் பெருமிதங்கள் பேசுவதிலே பெரும்பாலான காலத்தைக் கடத்தியிருக்கிறோம். உலமாகயமாக்களில் அல்லது இன்னுமொரு இனத்தின் திட்டமிட்ட பண்பாட்டு அழிப்பில் எமது தமிழ் மொழியும் அடையாளங்களும் சிக்கியிருக்கும் பொழுது அதனை எப்படிப்… Read More »

தலைமுறை கடந்த குறிப்பு

அனுபவக்குறிப்பு யாழ்.பொதுசன நூலகம் கச்சேரிக்கு முன்னுள்ள பரந்த கட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமாகியது. மகோகனி மரங்கள் சூழ, மிக அமைதியான சூழலில் நூலகம் இயங்கியது. அப்போது நான் சிறுவர் பகுதியில் அதிகநேரம் செலவழிப்பேன். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆங்கிலத் திரைப்படங்கள் ஒன்றை ஒவ்வொரு வாரமும் காட்சிப்படுத்துவார்கள். ஜுரசிக் பார்க் என்ற முதலாவது ஆங்கிலப்படத்தை நூலகத்தில் பார்த்த அனுபவம் இன்னும் எனக்கு நினைவில் இருக்கின்றது. நிறையச் சிறுவர்களைப் போலவே சிறுவர் பகுதியிலுள்ள கொமிக்ஸ் புத்தகங்கள் வாசிப்புத் தொடக்கத்தை எனக்கும் கொடுத்தது. மாயாவியின்… Read More »