உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’

அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும் வகையில் சொல்லிச் சென்றிருக்கும். இந்தப் புன்னகைக்க வைக்கும் தன்மைதான் அப்புத்தகத்தின் வெற்றியோ என்று கூட தோன்ற வைக்கும். பால்யத்தை மீட்டிப் பார்க்கும் போது இனிமையான சம்பவங்கள் சட்டென்று முதலில் நினைவுக்கு வரும்; பின்னர் மெல்ல மெல்ல அந்த நினைவுகளைக் கடந்து கசப்பான… Read More »

பிரித் நூலின் தரிசனம்

அனோஜன், யானை சிறுகதை வாசித்தேன். கடைசியிலுள்ள பிரித் நூலின் தரிசனம் திறப்பை அளித்தது. ஆங்கிலத்தில் மாற்றியதை இணைத்துள்ளேன்.   அன்புடன் சேது வேலுமணி சென்னை   பிரித் நூலைப் பற்றி மேலும் தகவல் தெரியப்படுத்தவும். நன்றி.  *** கடந்த காலத்தில் நாம் இருந்தோம். இப்போது அதில் இல்லை. எதிர்காலத்தில் நாம் இருக்கலாம். ஆனால் இந்தக் கணத்தில் அதிலும் இல்லை. நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கிறோம்; இறந்தகாலமும் எதிர்காலமும் இல்லை. அதோடு நிகழ்காலமும் இல்லை. நிகழ்காலம் என்பது நாம் உணர்ந்து… Read More »

பிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்

1 இலக்கிய வகைப்பாடுகள் அவசியம் தேவைதானா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். அவற்றைப் பிரிவினைக்குள் உட்படுத்துவதற்கு புறவயத் தேவைகள் இல்லை. எனினும் வாசிப்பின் இலகுவுக்கும், மேலதிகமான புரிதலுக்கும் இலக்கியத்தின் வகைப்பாடுகள் தேவையாகத்தான் இருக்கின்றன. விமர்சினரீதியாக ஒரு படைப்பை அணுகுவதற்கும் வகைபாடுகள் தேவையாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இங்கேயே பன்மைத்துவமான அழகியல் சாத்தியங்களை கருத்தில்கொள்ளவும் இயலும். புகலிட இலக்கியம் என்றால் என்ன? எந்தப் பண்புகளின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தலாம் என்பதற்கான விடைகள் இன்னும் தீர்க்கமாக நம்மிடம் இல்லாவிடினும், இலங்கையில்… Read More »

அனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

ஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி.. அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உண்டு. குடும்பத்தின் கடைசிப் பொடியன் நான்தான். பிறந்தது வளர்ந்தது யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை எனும் ஊரில். எனினும் எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது, 1995-ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு நிகழ்ந்தது. கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக எனது வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது. எனது பதின்ம வயதின் இறுதியில் போர்… Read More »

அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – சுனில் கிருஷ்ணன்

அனோஜன் பாலகிருஷ்ணன் தொண்ணூறுகளில் பிறந்து எழுத வந்த ஈழத்து எழுத்தாளர். ஈழத் தமிழுக்கு உட்கிடங்காகவே ஓசை நயமும் அழகும் இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அனோஜன் பயன்படுத்தும் ‘புகையிரதம்’ எனும் சொல் ஒரு உதாரணம். ஈழ எழுத்தாளர்களுக்கு தமிழக எழுத்தாளர்களைக் காட்டிலும் உக்கிரமான வாழ்வனுபவங்கள் அதிகம். அதன் அமைதியின்மை துரதிர்ஷ்டவசமானதே. ஹெமிங்க்வே, போர் ஆபத்தானதுதான், ஆனால் படைப்பூக்கத்திற்கு மிகவும் சாதகமானது, என்கிறார். தலைமுறைகளாக நீண்ட போர், கிளர்ச்சிகள் தமிழக எழுத்தாளர்கள் அடைய முடியாத அனுபவங்களை அவர்களுக்கு… Read More »

போகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் தொகுப்பை வாசித்து முடித்தபின் உடனடியாக எனக்குத் தோன்றியது பதற்றம் சுரக்கும் புதிர் நிறைந்த துயர்தான். சிக்காகிய நூல் பந்திலிருந்து நூலை விடுவிப்பது போல இந்தத் துயர் கழன்று கழன்று மேலும் சிக்காகியது. போகன் சிருஷ்டிக்கும் உலகம் மிதந்தலையும் துயருக்குள் புறக்கணிப்பின் விளிம்பில் சுரக்கும் தாழ்வு மனப்பான்மையாலும் அன்பின் நேர்மறை சிடுக்குகளுக்குள் சிக்குண்டு அவஸ்தைப்படுபவர்களின் பதற்றம் கொண்ட அகவுலகத்தாலும் நிரம்பியுள்ளது. ஒருவகையில் அம்மானுடர்கள் அவ்விருத்தலை தத்தளிப்புடன் சிறுதயக்கத்துக்குப் பின் ஏற்கவும் செய்கிறார்கள். ‘பாஸிங் ஷோ’… Read More »

போர்வை – சிறுகதை

1981-இல் அச்சாகிய ஈழநாடு பத்திரிகையில் வெளியான இந்த துண்டுச்செய்தியை வாசிக்காமல் இக்கதைக்குள் செல்ல முடியாது என்பதால் இதை வாசித்தே ஆகவேண்டிய கட்டாயம். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் செங்குந்தா இந்துக் கல்லூரியருகே தமிழ் புதிய புலிகளின் தலைவர் செட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரருகே கழுத்திலிருந்த மட்டையில் “தேச விடுதலைக்காகச் சேர்த்த பணத்தைக் கையாடல் செய்ததற்காகவும், சகதோழர்களை சிங்கள இனவாத அரசுக்கு காட்டிக்கொடுத்ததற்காவும் இந்த மரணதண்டனை வழங்கப்படுகிறது” என்று எழுதப்பட்டிருந்தது. வீதியில் அனாதரவாக வீசப்பட்ட அவரின் சடலம் கருப்புப் போர்வையால் மூடப்பட்டிருந்தது.… Read More »

அலைதலும் எழுத்தும்

பொதுவாகத் தொண்ணூறுகளின் பின்னர் பிறந்தவர்களை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள் என்ற கோட்டில் இருபிரிவாகப் பிரிக்கலாம். நான் இராணுவக் கட்டுப்பாடுப் பகுதியிலே வளர நேர்ந்தது. எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது அதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் பட்டினம் இராணுவத்தின் நுழைவால் முற்றிலும் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஏறக்குறைய ஐந்துலட்சம் மக்கள் யாழிலிருந்து வெளியாகி கொடிகாமத்தைத் தாண்டி வன்னிப்பகுதி நோக்கி இடம்பெயர்ந்தார்கள். ஒருவகையில் விடுதலைப்புலிகளினால் நிர்ப்பந்திக்கப்பட்ட இடம்பெயர்வு அது. அரியாலையில் வசித்த எங்கள்… Read More »

லெனின் சின்னத்தம்பி

என்னுடைய பல்கலைக்கழக இரசாயன ஆய்வுகூடத்தில் ஆய்வொன்றைச் செய்தோம். சில மூலப்பொருட்களை நீரில் கரைத்துவிட்டு கரைந்த மூலப்பொருட்களின் இயல்பை நீரில் ஆராய்ந்தோம். நீரின் மூலக்கூற்றின் இயல்பை அவை எடுத்தன. ஆனால், எப்போதும் நீரின் இயல்பில் அவற்றால் இருக்கமுடியவில்லை. சில இடங்களில் தங்கள் சுய ரூபத்தைக் காட்டின. உண்மையில் அவை பாவனைதான் செய்கின்றன. ஓர் அந்நிய நாட்டில் புலம்பெயர்த்து வசிக்கக்கூடிய ஒரு தொகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளும் ஏறக்குறைய இவ்வாறான ஒன்றுதான். அங்கே பூர்வீகமாக வாழும் மக்களின் வாழ்க்கை, பண்பாட்டுச்… Read More »

சாய்வு – சிறுகதை

நான் உனைச் சந்தித்தது ஒரு குளிர்காலப் பொழுதில். மரங்கள் இலைகளை உதிர்த்து அலுமினியக் கம்பிகள் போல் விறைப்பாக சலனம் அற்று நின்றிருந்தன. என் அறை ஜன்னலுக்கால் எட்டிப்பார்க்க துமிக்கும் பனித்துளிகள் பருத்திப் பஞ்சுபோல் வீழ்ந்து கொண்டிருந்தன. சோர்வுடன் தலையை போர்வைக்குள் உள்ளீர்த்து அமிழ்ந்தேன். அப்போது தான் உன் வருகைக்கான சத்தம் கேட்டது. பீடித்திருந்த தூக்கம் கலைந்து கொண்டிருந்த பொழுதுகள் அவை. சோம்பலோடு கைகளை உதறி ஜன்னலுக்கால் வெளியே பார்த்தேன். வெண்ணொளி என் கண்களை கூசச் செய்தது. தடுமாறி… Read More »