Monthly Archives: May 2016

பஷீரின் மதில்கள்

மலையாள எழுத்தாளர்களில் மிகமுக்கியமானவரான வைக்கம் முகமது பஷீரின் மதில்கள் குறுநாவல் நீண்ட காலம் தேடியது. மிகச் சமீபத்தில்தான் வாசிக்கக் கிடைத்தது. பொதுவாகவே மிகக்சிறிய பக்க எண்ணிக்கையைக் கொண்ட கதைகளை எழுதுவது பஷீரின் வழமை. மதில்கள் நாவல் வெறும் 39 பக்கங்களில் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது. காலச்சுவட்டில் பஷீரின் படைப்புகள் அனைத்தும் குளச்சல் மு. யூசுப்பின் மொழிபெயர்ப்பில் தொடர்ச்சியாக வெளிவந்தது. ஆனால், மதில்கள் நாவலை சுகுமாரன் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். ஏற்கனவே மதில்கள் நாவலை தமிழில் சுராவும்(சுந்தர ராமசாமி அல்ல)… Read More »

சேரநாட்டு விஜயம் -2

2 ராமின் அலுவகத்திலே மெய்மறந்து அதிகநேரம் செலவிட நேரிட்டதால், வசந்தகுமாரைச் சந்திக்கச்செல்ல இயலவில்லை. “டேய்.. 30 நிமிடம் கழிந்ததும் கண்ணைக் காட்டியிருக்கலாம்தானே..” என்று சயந்தன் சோமிதரனைக் கடிந்துகொண்டார். கடுப்பான சோமிதரன் “இப்ப காலைக்காட்டுவன். பேசாமல் இரு..” என்று கடிந்துகொண்டார். இரவு ஏழு மணிவாக்கில் இளவேனிலையும் நண்பர்களையும் சந்திப்பதாக இருந்தது. இப்பொழுதே ஒன்பது மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது. இளவேனில் இரண்டொரு தடவை தொலைபேசியில் “பாஸ் எங்க இருக்கிறீங்க..?” என்று கேட்டார். “இதோ.. வீட்டுக்குப்போயிட்டு ஒரு டாக்சியைப் பிடிச்சு வர்றோம்” என்று… Read More »

சேரநாட்டு விஜயம்

01- கன்னிப் பயணம் காட்டுநாயக்கா விமானநிலையத்தை இதுவரை வெளியே நின்று வேடிக்கை பார்த்த சந்தர்பங்களே எனக்கு அமைந்திருந்தது. முதல் தடவையாக கடல்தாண்டி நாடு கடக்கப் போகின்றேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கன்னிப் பயணம் நிகழவிருந்தது. முதலில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் செல்லவேண்டும். 15.04.2016 அன்று யாழ்ப்பாணத்தில் இருந்து அதிகாலை ருத்திரதேவி புகையிரதத்தில் கொழும்பு நோக்கிப் புறப்பட்டேன். கொட்டுவை போய்ச்சேர ஒன்றரை ஆகியிருந்தது. புதுவருடப்பிறப்பை ஒட்டிய விடுமுறையாக இருந்ததினால் கொட்டுவை வழமையான நெரிசலற்று வெறிச்சோடியிருந்தது. முதுகுப்பையையும், இழுத்துக்கொண்டு செல்லும்… Read More »