சேரநாட்டு விஜயம்
01- கன்னிப் பயணம் காட்டுநாயக்கா விமானநிலையத்தை இதுவரை வெளியே நின்று வேடிக்கை பார்த்த சந்தர்பங்களே எனக்கு அமைந்திருந்தது. முதல் தடவையாக கடல்தாண்டி நாடு கடக்கப் போகின்றேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கன்னிப் பயணம் நிகழவிருந்தது. முதலில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் செல்லவேண்டும். 15.04.2016 அன்று யாழ்ப்பாணத்தில் இருந்து அதிகாலை ருத்திரதேவி புகையிரதத்தில் கொழும்பு நோக்கிப் புறப்பட்டேன். கொட்டுவை போய்ச்சேர ஒன்றரை ஆகியிருந்தது. புதுவருடப்பிறப்பை ஒட்டிய விடுமுறையாக இருந்ததினால் கொட்டுவை வழமையான நெரிசலற்று வெறிச்சோடியிருந்தது. முதுகுப்பையையும், இழுத்துக்கொண்டு செல்லும்… Read More »