Category Archives: ஈழம்

களங்கமின்மையின் பொலிவு : தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் சிறுகதை ‘பொட்டு’ ஆக்காட்டி இதழில் ‘ரிஷான் ஷெரீப்’ மொழிபெயர்ப்பில் வெளிவந்த போது, அதனைப் படித்துவிட்டு தர்மு பிரசாத்துடன் சிறுகதை வடிவம் சார்ந்து நிறைய உரையாடியதாக நினைவு. நவீனத்துவ எழுத்தாளர்களுக்கு இருக்கக்கூடிய பிசிரில்லாத கூர்மையான மொழிநடை மட்டுமன்றி, யதார்த்தவாத கதை சொல்லலில், அதீத சித்தரிப்பு நோக்கிச்செல்லும் போது நிகழும் அடர்த்தி குறைப்பு சார்ந்து, பொட்டு சிறுகதையூடாக தொலை தூரம் யோசிக்க முடிந்தது. அக்கதையின் கச்சிதம் அப்படி. வடிவக் கச்சிதம் கொடுக்கக்கூடிய கலையமைதிக்கும், கட்டற்ற சித்தரிப்பில் நிகழும்… Read More »

மோகனம் : சிறுகதை

  1 “ஹலோ…மிஸ்டர் சதாஷிவம்?” எதிர் முனையில் இனிய நடுத்தரவயது பெண்ணின் குரல் ஒலித்தது. தொலைக்காட்சியின் ஒலியை தொலையியக்கியால் குறைந்தேன்.   “எஸ்…”   “நாங்கள் வூட்கிரீன் பொலிஸ் பிரிவிலிருந்து தொடர்பு கொள்கிறோம்” வழுக்கிச் செல்லும் தூய பிரித்தானிய உச்சரிப்பில் வார்த்தைகள் ஒலித்தன. பொலிஸ் என்றவுடன் என் உடல் என்னையும் மீறி சிறிதாக விழிப்புக் கொண்டது.   “சொல்லுங்கள்,”   “உங்கள் மகனது பெயர் செந்தூரன்தானே?”   “ ஆமாம்”   “உறுதிப்படுத்தியமைக்கு நன்றி. செந்தூரனும், அவரது… Read More »

திரைப்பட வட்டங்களும் அதன் தேவையின் தொடர்ச்சியும்…

காண்பியக் கலையின் வீச்சு என்பது ரசிக்கும் மனநிலையைத் தாண்டி மிகக் கூர்மையாக மனதின் ஆழத்தில் பல சலனங்களை நிகழ்த்திவிடும். இன்றிருக்கும் கலைவடிவங்களில் திரைப்படம் என்ற கூட்டுக் கலைவடிவம் ஏற்படுத்தும் தாக்கம், மற்றைய கலைவடிவங்களில் இருந்து அதீத வீச்சுடன் பாயும் செழுமையான கலைவடிவமாக இருக்கின்றது. காட்சிகள் மூலம் அர்த்தங்களை கடத்துதல் என்பது மிக நேரிடையானது. ஒவ்வொரு பிராயத்திலும் நாம் பார்க்கும் திரைப்படங்கள் ரசனை மாற்றத்தில் பலதை நிகழ்த்தி வாழ்கையின் உட்கூறுகளில் நுணுக்கமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. நாம் சிந்திக்கும், செயல்படும்… Read More »

மாற்றிப் பேசுதலும் மறைமுக சாதியமும்!

‘சாதியத்தின் இயல்பாக்கமும் டொமினிக் ஜீவாவின் அச்சமும்’ என்று  ராகவன் எழுதிய கட்டுரையில், என்னைப் பற்றி எழுதிய குறிப்புக்கு விளக்கம் எழுதலாம் என்று அக்கட்டுரையின் பின்னூட்டப் பெட்டியைத் தேடினால் அதனைக் காணவில்லை. அதனால் எனது வலைத்தளத்தில் பதிவிடுகிறேன். ராகவன் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு, முரளி சண்முகவேலனை  ‘அறிவாக, நுணுக்கமாகப் பேசுகிறீர்கள் அதனால் பிராமணரா?’ என்று நான் கேட்டேன் என்பது. இதனை முற்றாக மறுக்கிறேன்.   2018  டிசம்பர் 08  அன்று “பரியேறும் பெருமாள்” திரைப்படம் சார்ந்து ‘தமிழ் மொழிச் செயற்பாட்டகம்’ ஒழுங்கமைத்த நிகழ்வின் போது முரளி சண்முகவேலன்  ‘மையமாகும் விளிம்புகள்’ என்ற தலைப்பில்  பேசவந்தார். இந்தக் கூட்டத்தில்   சபையில்… Read More »

ஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து

நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன், விவாதிக்கிறவன். அதிலிருந்து தான் கலை, இலக்கியம் மீதான எனது பார்வையை நான் உருவாக்கிக் கொள்கிறேன். “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” – ஷோபாசக்தி ஈழ இலக்கியம் என்று ஆரம்பித்தாலே இரண்டு பெயர்களைத் தவிர்க்கவே இயலாது. முதன்மைப் படைப்பாளிகள் வரிசையில்… Read More »

கள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா

தாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு பண்பாட்டின் சிறுதுளி. அவன் எங்கு சென்றாலும் தனது பண்பாட்டை சுமந்துகொண்டே செல்வான். அப்பண்பாடு அகத்தில் புதைந்து -அவனுக்குள்ளே தூங்காமல் – நெளிந்தவாறே இருக்கும். செல்லும் இடத்தில் அவன் எதிர்நோக்கும் பண்பாட்டுடன் அவனுள்ளே புதைந்திருக்கும் அவனது பண்பாடு விழித்து மோதும். இந்த இரண்டு… Read More »

உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’

அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும் வகையில் சொல்லிச் சென்றிருக்கும். இந்தப் புன்னகைக்க வைக்கும் தன்மைதான் அப்புத்தகத்தின் வெற்றியோ என்று கூட தோன்ற வைக்கும். பால்யத்தை மீட்டிப் பார்க்கும் போது இனிமையான சம்பவங்கள் சட்டென்று முதலில் நினைவுக்கு வரும்; பின்னர் மெல்ல மெல்ல அந்த நினைவுகளைக் கடந்து கசப்பான… Read More »

பிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்

1 இலக்கிய வகைப்பாடுகள் அவசியம் தேவைதானா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். அவற்றைப் பிரிவினைக்குள் உட்படுத்துவதற்கு புறவயத் தேவைகள் இல்லை. எனினும் வாசிப்பின் இலகுவுக்கும், மேலதிகமான புரிதலுக்கும் இலக்கியத்தின் வகைப்பாடுகள் தேவையாகத்தான் இருக்கின்றன. விமர்சினரீதியாக ஒரு படைப்பை அணுகுவதற்கும் வகைபாடுகள் தேவையாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இங்கேயே பன்மைத்துவமான அழகியல் சாத்தியங்களை கருத்தில்கொள்ளவும் இயலும். புகலிட இலக்கியம் என்றால் என்ன? எந்தப் பண்புகளின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தலாம் என்பதற்கான விடைகள் இன்னும் தீர்க்கமாக நம்மிடம் இல்லாவிடினும், இலங்கையில்… Read More »

அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – சுனில் கிருஷ்ணன்

அனோஜன் பாலகிருஷ்ணன் தொண்ணூறுகளில் பிறந்து எழுத வந்த ஈழத்து எழுத்தாளர். ஈழத் தமிழுக்கு உட்கிடங்காகவே ஓசை நயமும் அழகும் இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அனோஜன் பயன்படுத்தும் ‘புகையிரதம்’ எனும் சொல் ஒரு உதாரணம். ஈழ எழுத்தாளர்களுக்கு தமிழக எழுத்தாளர்களைக் காட்டிலும் உக்கிரமான வாழ்வனுபவங்கள் அதிகம். அதன் அமைதியின்மை துரதிர்ஷ்டவசமானதே. ஹெமிங்க்வே, போர் ஆபத்தானதுதான், ஆனால் படைப்பூக்கத்திற்கு மிகவும் சாதகமானது, என்கிறார். தலைமுறைகளாக நீண்ட போர், கிளர்ச்சிகள் தமிழக எழுத்தாளர்கள் அடைய முடியாத அனுபவங்களை அவர்களுக்கு… Read More »

போர்வை – சிறுகதை

1981-இல் அச்சாகிய ஈழநாடு பத்திரிகையில் வெளியான இந்த துண்டுச்செய்தியை வாசிக்காமல் இக்கதைக்குள் செல்ல முடியாது என்பதால் இதை வாசித்தே ஆகவேண்டிய கட்டாயம். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் செங்குந்தா இந்துக் கல்லூரியருகே தமிழ் புதிய புலிகளின் தலைவர் செட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரருகே கழுத்திலிருந்த மட்டையில் “தேச விடுதலைக்காகச் சேர்த்த பணத்தைக் கையாடல் செய்ததற்காகவும், சகதோழர்களை சிங்கள இனவாத அரசுக்கு காட்டிக்கொடுத்ததற்காவும் இந்த மரணதண்டனை வழங்கப்படுகிறது” என்று எழுதப்பட்டிருந்தது. வீதியில் அனாதரவாக வீசப்பட்ட அவரின் சடலம் கருப்புப் போர்வையால் மூடப்பட்டிருந்தது.… Read More »