சதைகள் – சிறுகதைகள் : நோயல் நடேசனின் விமர்சனப் பதிவு

காவியங்கள் எல்லாம் காமம் காதலும் பற்றியவை. இவை மூளையின் ஒரே பகுதியான ரெம்போரல்(Temporal lobe) பகுதியில் இருந்து உதயமாகின்றன. இராமாயணம் சீதை மேல்கொண்ட காமத்தின் விளைவு. மகாபாரத்தில் நேரடியான காமம் போருக்குக் காரணமற்ற போதிலும் தேவைக்கதிமாக அங்குள்ளது. ஐந்து ஆண்களின் மனைவியான சித்தரிப்பு இதையே நமக்குணர்த்துகிறது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளாது அவற்றை மதபீடத்தில் வைத்துவிடுகிறோம். ஹோமரின் இலியட் உலகத்திலே அழகி ஹெலன் 12 வயத்துச்சிறுமியாக கடத்தப்படுகிறாள். இரண்டாவதாக மணமான பின்பு ரொய் இளவரசன் பரிசால் கடத்தப்படுகிறாள். ஓடிசியில்… Read More »

நிரூபா ஆயிலியதின் விமர்சனக் குறிப்புக்கான என் எதிர்வினை

அனோஜன் பாலகிஷ்ணனின் “அவள் அப்படித்தான் திரைப் படமும் பெண்களின் மீதான கழிவிரக்கமும்” என்கின்ற முகநூல் பதிவின் மீதான விமர்சனக் குறிப்பு. பெண்ணுக்கும் ஆணுக்குமிடையிலான வேறுபாடுகள் பால் ரீதியானதே.மாதவிடாய் மகற்பேறு போன்ற விடயங்கள் பெண்களின் உயிரியில் ரீதியான ஒரு செயற்பாடாக இருக்கின்றது. பெண்கள் இவ்விடயங்களைச் சாதாரணமாகக் கடந்து செல்லாமல் வெளிப்படுத்துவதும் எழுத்தில் பதிவிடுவதும் இவ் விடயங்களைப் பெரிதுபடுத்தி கழிவிரக்கம் உண்டுபண்ணி சலுகைகளை பெற்றுக்கொள்ள விளைவதாகும். இவ்வாறான செயல்கள் பெண்களை மேலும் ஒடுக்கும் நிலையிலேயே வைத்திருக்கும். பிரசவத்தின்போது பெண்கள் ஆண்… Read More »

இரண்டு திரைப்படங்கள்

பஷன் – 2008 : பாவனைகளின் உலகம் பண்டங்களை மேலும்மேலும் விற்பதற்குச் செய்யும் விளம்பரங்களின் பின்பே இருக்கும் உழைப்பு மலைக்க வைக்கக்கூடியது. அழகு கூட ஒரு பண்டம்தான். அழகின் மேல் கட்டப்படும் அன்பும் ஒரு பண்டம்தான். பஷன் திரைப்படம் பாவனைகளுக்குப் பின்பே இருக்கும் அரசியலைப் பேசுகின்றது. உடல் மொழியிலிருந்து வெளிப்படுத்தும் உணர்வுகள் வரை செயற்கையாக வெளிப்படும் போலிப் பாவனைகள் எப்போதும் செயற்கையான பிளாஸ்டிக் சந்தோஷ உலகத்தைத் துருத்திக்கொண்டு காட்டும், மகிழ்ச்சியும் கருணையும் நிரம்பிய தேசமாகக் காட்டும். ஆனால்,… Read More »

பட்ட விரட்டி – மீள்தலின் தத்தளிப்பு

குற்றவுணர்வுகளில் வீழ்வதும் அதிலிருந்து வெளியேறத் தவிப்பதும் மனித வாழ்கையில் சகஜமான ஒன்றுதான். ஆனால், சுற்றிப்பிடிக்கும் குற்றவுணர்வுகளின் வீரியத்திற்கு ஏற்ப அதன் பாதிப்புகள் தொடரலாம். எனினும் குற்றவுணர்வு பிடிக்கப்பட்டவரின் மனதின் பலவீனம் அதன் விளிம்பு எல்லைகளை மாற்ற முயலலாம். சிறிய தவறுகளுக்குக்கூட அதிகம் வருந்தலாம். சிலர் பெரிய அநீதிகளுக்குக் கொஞ்சம் வருந்தலாம். சிலர் இறுதிக்காலங்களில் பலதை நினைத்து அதிகம் வருந்தலாம். அது தனிமனிதக் குணம் சார்ந்தது. செயலின்மையின் முடிவற்ற எல்லையில் நின்று தத்தளித்து வெளியேறிய பின் ஏற்படும் குற்றவுணர்வுகளில்… Read More »

Blue Is the Warmest Colour – அன்பு பால் நிலை கடந்தது

உடல் உறவுடன் சேர்ந்து வாழ்தல் என்பது ஆண்-பெண் என்ற இரு பாலினத்திற்கு உரித்தான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்தாலும், இன்று உடலுறவுடன் சேர்ந்து வாழ்தல் என்பது பால் நிலை கடந்ததாகவே பார்க்கப்படுகின்றது. அதாவது உடல் உறவு சார்ந்த உறவு என்பது பால் நிலை(Gender) கடந்ததாகவுள்ளது. ஆணோ அல்லது பெண்ணோ தனக்குப் பிடித்த ஆணுடனோ, பெண்ணுடனோ, திருநங்கையுடனோ,திருநம்பியுடனோ உடலுறவு வைத்துக் கொள்வதுடன் சேர்ந்தும் வாழலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை மேலைத்தேய நாடுகளில் உருவாகிவருவதுடன், அதனை ஒட்டிய விவாதங்கள் கீழைத்தேய நாட்டில்… Read More »

“அவள் அப்படித்தான்” திரைப்படமும் பெண்களின் மீதான கழிவிரக்கமும்.

“அவள் அப்படித்தான்” திரைப்படம் நேற்று(06.05.2017) நிகழ்படம் நிகழ்வில் திரையிடப்பட்டது. பார்க்க வேண்டிய திரைப்படப் பட்டியலில் வைத்திருந்த இப்படத்தை ஒருவகையாகப் பார்த்தாகிவிட்டது. நடைமுறையில் இருக்கும் பிரச்சனைகளுக்குச் சிந்தனை வடிவில்,எழுத்து வடிவில் முன்வைக்கப்படும் தீர்வுகளுக்கு அல்லது சிந்தனை முறைகளுக்கு, செயல்வடிவம் கொடுக்கும் போது ஏற்படும் தடங்கல்கள் விரிவாக உரையாடப்பட வேண்டியவை. அப்படியாகச் செயல்வடிவம் கொடுக்கும்போது ஏற்படும் தடங்கல்கள் பற்றிய சிந்தனையைக் கிளறி கடுமையாக யோசிக்க வைத்த திரைப்படமாக இருக்கின்றது ‘அவள் அப்படித்தான்’. ஸ்ரீ பிரியா, கமல்ஹாசன்,ரஜினிகாந்த் இணைந்து ருத்ரைய்யாவின் நெறியாள்கையில்… Read More »

ஆண்மை – எஸ்.பொன்னுத்துரை – 13

எஸ்.பொவின் படைபுகலம் அகம் சார்ந்த நெருக்கடிகளைப் புறவயமான சித்தரிப்புகளுடன் சித்தரிப்பவை. காமம் சார்ந்த மன நுண்ணடுக்குகளில் ஒளிந்திருக்கும் அடியாழப் பிரச்சினைகளைத் தொட்டு எழுதுவதிலே எஸ்.பொ முனைப்பாக இருந்தார். தனிமனித பிரச்சினைகளும், அகச் சிக்கல்களுக்குமே பிரதான இடத்தைக் கொடுத்தார். இயல்பாக உயிரினங்களுக்கு இருக்கக்கூடிய காமத்தையும், அதனை மீறும் தருணங்களையும் கண்டு, மனித மனதை இயல்பாகவே ஒப்புவித்தார். காம உணர்வுகள் சார்ந்த குற்றவுணர்ச்சிகள் அவரின் படைப்புகளில் இருப்பதில்லை. அவரது கதைகளில் சித்தரிக்கப்படும் யாழ்ப்பாணத்து நிலம் என்பது, மிகுந்த நுண்மையான சித்தரிப்புக்களால்… Read More »

வாசனை – சிறுகதை

இத்தனை காலம் கடந்து அவனை சந்திப்பேன் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் முகம் மட்டுமே எனக்கு மங்கலாக நினைவில் இருந்தது. ஜெயந்தனை கண்டவுடன் புதையுண்டிருந்த அவனின் முகம் ஞாபக அடுக்களில் இருந்து ஓர் அலைபோல் எழுந்து வந்து என் காலடியில் மோதி பொடிப்பொடியாக உதிர்ந்தது. அவன் தன் மனைவியை விட்டுவிட்டு என்னை மட்டும் தனியாக அழைப்பது மெலிதான சஞ்சலத்தைத் தந்தது. அவன் மனைவி தன் உறவினர் ஒருவரைப் பார்க்கப்போய்விட்டதாக நான் கேட்காமலே தொலைபேசியில் சொன்னான். ஹரிக்குச் சொல்லலாமா… Read More »

மீன்கள் – தெளிவத்தை ஜோசப் – 12

நாம் முன்நோக்கிச் செல்ல கிடைக்கும் வாய்ப்புக்களைச் சாதூர்யமாகப் பயன்படுத்திக் கொள்ளும் போது ஏறக்குறைய இன்னொருவருக்கு கிடைக்கவிருந்த வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. ஒன்றை ஒன்று தள்ளி முன்னே நகர்வதுதான் வாழ்வின் நகர்வியக்கமாக இருக்கின்றது. உள்ளிருந்து செயற்படுத்தும் விசையும் அதுதான். பெரிய மீன் சின்ன மீனை உண்டு உயிர்வாழ நேர்வதைப்போல ஒருவருடைய வாய்ப்பைப் பறித்தே மற்றொருவர் வாழும் நிலைமை போட்டிகொண்ட அவசரசகதி வாழ்வில் உருவாகிவருகிறது. உயிர்வாழ்தலின் போராட்டம் அத்தகைய உக்கிரம் கொண்டது. தெளிவத்தை ஜோசப் எழுதியிருக்கும் சிறுகதைகளில் முதன்மையான சிறுகதை “மீன்கள்”.… Read More »

ஒரு பகற்பொழுது – நந்தினி சேவியர் – 11

உணவு,உடை,உறையுள் மூன்றும்தான் மனித வாழ்க்கையின் தொடர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கின்றது. இது தனியே மனிதர்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றில்லை, மிருகங்களுக்கும் இதே உணவு,உறையுள் தான் உயிர்வாழத் தேவைப்படுகின்றன. அப்போது மனிதர்களுக்கும், மிருகத்துக்கும் என்ன வேறுபாடு என்ற சந்தேகம் வரும் அல்லவா; மனிதர்கள் இதிலிருந்து நுண்மையாக வேறுபடுகிறார்கள். அன்பும் கருணையும், அறிதலும் தான் மிருகங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றது. உயிர்வாழ்வதையும் தாண்டி ஏதோவொன்று வாழ்கையில் இருக்கின்றது அல்லவா. நந்தினி சேவியர் எழுதிய சிறுகதையில் ஒன்று ‘ஒரு பகற்பொழுது’.… Read More »