Category Archives: இலக்கியம்

அனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

ஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி.. அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உண்டு. குடும்பத்தின் கடைசிப் பொடியன் நான்தான். பிறந்தது வளர்ந்தது யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை எனும் ஊரில். எனினும் எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது, 1995-ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு நிகழ்ந்தது. கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக எனது வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது. எனது பதின்ம வயதின் இறுதியில் போர்… Read More »

அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – சுனில் கிருஷ்ணன்

அனோஜன் பாலகிருஷ்ணன் தொண்ணூறுகளில் பிறந்து எழுத வந்த ஈழத்து எழுத்தாளர். ஈழத் தமிழுக்கு உட்கிடங்காகவே ஓசை நயமும் அழகும் இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அனோஜன் பயன்படுத்தும் ‘புகையிரதம்’ எனும் சொல் ஒரு உதாரணம். ஈழ எழுத்தாளர்களுக்கு தமிழக எழுத்தாளர்களைக் காட்டிலும் உக்கிரமான வாழ்வனுபவங்கள் அதிகம். அதன் அமைதியின்மை துரதிர்ஷ்டவசமானதே. ஹெமிங்க்வே, போர் ஆபத்தானதுதான், ஆனால் படைப்பூக்கத்திற்கு மிகவும் சாதகமானது, என்கிறார். தலைமுறைகளாக நீண்ட போர், கிளர்ச்சிகள் தமிழக எழுத்தாளர்கள் அடைய முடியாத அனுபவங்களை அவர்களுக்கு… Read More »

போகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் தொகுப்பை வாசித்து முடித்தபின் உடனடியாக எனக்குத் தோன்றியது பதற்றம் சுரக்கும் புதிர் நிறைந்த துயர்தான். சிக்காகிய நூல் பந்திலிருந்து நூலை விடுவிப்பது போல இந்தத் துயர் கழன்று கழன்று மேலும் சிக்காகியது. போகன் சிருஷ்டிக்கும் உலகம் மிதந்தலையும் துயருக்குள் புறக்கணிப்பின் விளிம்பில் சுரக்கும் தாழ்வு மனப்பான்மையாலும் அன்பின் நேர்மறை சிடுக்குகளுக்குள் சிக்குண்டு அவஸ்தைப்படுபவர்களின் பதற்றம் கொண்ட அகவுலகத்தாலும் நிரம்பியுள்ளது. ஒருவகையில் அம்மானுடர்கள் அவ்விருத்தலை தத்தளிப்புடன் சிறுதயக்கத்துக்குப் பின் ஏற்கவும் செய்கிறார்கள். ‘பாஸிங் ஷோ’… Read More »

போர்வை – சிறுகதை

1981-இல் அச்சாகிய ஈழநாடு பத்திரிகையில் வெளியான இந்த துண்டுச்செய்தியை வாசிக்காமல் இக்கதைக்குள் செல்ல முடியாது என்பதால் இதை வாசித்தே ஆகவேண்டிய கட்டாயம். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் செங்குந்தா இந்துக் கல்லூரியருகே தமிழ் புதிய புலிகளின் தலைவர் செட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரருகே கழுத்திலிருந்த மட்டையில் “தேச விடுதலைக்காகச் சேர்த்த பணத்தைக் கையாடல் செய்ததற்காகவும், சகதோழர்களை சிங்கள இனவாத அரசுக்கு காட்டிக்கொடுத்ததற்காவும் இந்த மரணதண்டனை வழங்கப்படுகிறது” என்று எழுதப்பட்டிருந்தது. வீதியில் அனாதரவாக வீசப்பட்ட அவரின் சடலம் கருப்புப் போர்வையால் மூடப்பட்டிருந்தது.… Read More »

அலைதலும் எழுத்தும்

பொதுவாகத் தொண்ணூறுகளின் பின்னர் பிறந்தவர்களை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள் என்ற கோட்டில் இருபிரிவாகப் பிரிக்கலாம். நான் இராணுவக் கட்டுப்பாடுப் பகுதியிலே வளர நேர்ந்தது. எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது அதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் பட்டினம் இராணுவத்தின் நுழைவால் முற்றிலும் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஏறக்குறைய ஐந்துலட்சம் மக்கள் யாழிலிருந்து வெளியாகி கொடிகாமத்தைத் தாண்டி வன்னிப்பகுதி நோக்கி இடம்பெயர்ந்தார்கள். ஒருவகையில் விடுதலைப்புலிகளினால் நிர்ப்பந்திக்கப்பட்ட இடம்பெயர்வு அது. அரியாலையில் வசித்த எங்கள்… Read More »

லெனின் சின்னத்தம்பி

என்னுடைய பல்கலைக்கழக இரசாயன ஆய்வுகூடத்தில் ஆய்வொன்றைச் செய்தோம். சில மூலப்பொருட்களை நீரில் கரைத்துவிட்டு கரைந்த மூலப்பொருட்களின் இயல்பை நீரில் ஆராய்ந்தோம். நீரின் மூலக்கூற்றின் இயல்பை அவை எடுத்தன. ஆனால், எப்போதும் நீரின் இயல்பில் அவற்றால் இருக்கமுடியவில்லை. சில இடங்களில் தங்கள் சுய ரூபத்தைக் காட்டின. உண்மையில் அவை பாவனைதான் செய்கின்றன. ஓர் அந்நிய நாட்டில் புலம்பெயர்த்து வசிக்கக்கூடிய ஒரு தொகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளும் ஏறக்குறைய இவ்வாறான ஒன்றுதான். அங்கே பூர்வீகமாக வாழும் மக்களின் வாழ்க்கை, பண்பாட்டுச்… Read More »

Give it to Angkar

இரண்டாயிரங்களின் பின்னர் தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை என்று லஷ்மி மணிவண்ணன் அறிவித்திருந்த நாளில் லஷ்மி சரவணகுமாரின் கொமோரோ நாவலை வாசித்து முடித்திருந்தேன். நாவல் கொடுத்த கனதியான மனநிலையில் லஷ்மி மணிவண்ணனின் அந்தக் கூற்று கொமோரா நாவலில் அர்த்தம் நிரம்பியதாக ஒரு கணம் பட்டும் மறைந்தது. தமிழில் எழுதப்படும் ஒரு தொகுதி நாவல்கள் சம்பவங்களின் தொகுப்பாக்கம் மட்டுமே. புனைவின் கட்டற்ற சுதந்திரத்தின் நுனியைக் கூடத் தீண்டாமல் முடிந்துவிடும் எளிய வாழ்க்கைச் சித்திரிப்புகளுடன் மாத்திரம் இருக்கின்றன. நாவல்களில் தமக்கான தனியான… Read More »

ஒரு கோப்பை காபி

“ஒரு கோப்பை காபி” சிறுகதை விகடன் இதழில் வாசித்தேன். இந்த வருடம் முடியும் தருவாயில் ஏதோவொரு மூலையில் சோர்வுகள் ஆட்கொள்ளச் சுருங்கியிருந்த சமயம் இக்கதை மிகப்பெரிய மனத் திறப்பைத் தந்தது. இக்கதை பற்றியே நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன். மிக நேரடியாகக் கதை ஆரம்பிக்கிறது. எளிமையான சித்தரிப்பு. ஒரு வேகமான வாசிப்பில் ஒரு கோப்பியை ஆறவிடமுன் குடிப்பதுபோல சடாறென்று முடித்துவிடலாம். ஆனால், இதன் ஆழம் மிகமிக அதிகமானது. பல்வேறு சுழிப்புகளும் சிடுக்குகளும் கொண்டது. தன்னை வலிமையானவனாக நினைத்துக்கொள்ளும் ஆண்… Read More »

தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் – உமா வரதராஜன் – 17

எனக்குப் பிடித்த ஈழத்துக் கதை சொல்லிகளில் ஒருவர் உமா வரதராஜன். அவர் எழுதிய முதல் சிறுகதை 1974-இல் ‘அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும்’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக் கொண்டிருந்தாலும் சொற்பமாகவே எழுதியிருக்கிறார். அவரது சிறுகதைகளை அங்கும் இங்குமங்குமாக வாசித்ததுண்டு. சிறுகதை வடிவத்தைக் கூர்மையாகப் பிரயோகித்த ஒருவராகவே அவர் எனக்குத் தெரிகிறார். மூன்றாம் சிலுவை என்கிற அவரது நாவல் என்னை அதிகம் கவரவில்லை. அலை இதழ் இரண்டை மீண்டும் தட்டிப் பார்க்கும்போது “தொலைவில் தெரியும்… Read More »

ஒளிர் நிழல் – சுரேஷ் பிரதீப்

தன்னை குழந்தையென கற்பனை செய்து கொள்ளும் தன்மையை நிறைய பெண்களிடம் பார்க்க முடிகிறது. அவர்களின் ஊசலாட்டங்களை கத்தரித்து “நீ ஒரு பெண். நிச்சயம் குழந்தை கிடையாது” சொல்ல வேண்டும் என எண்ணினேன். ஆனால் மாலினி இப்போது அந்த குழந்தைத்தனத்துக்கு அங்கீகாரம் எதிர்பார்க்கிறாள். இது சுரேஷ் பிரதீபின் “மையல்” சிறுகதையில் வரும் விவரணை ஒன்று. இந்த நுணுக்கமான அவதானம் ஒன்று போதும். சுரேஷின் கூர்மையான அவதானங்களைக் காட்ட. பெரும்பாலான பெண்கள் அணிந்துகொள்ளும் ஒரு புனைவு உடல் மொழி இந்தக்… Read More »