Tag Archives: கு.அழகிரிசாமி

கு.அழகிரிசாமி : மீள மீள படிக்கப்பட வேண்டிய படைப்பாளி

கு.அழகிரிசாமி தனக்குத் தோன்றும் கருக்களை நான்கைந்து வரிகளில் நாட்குறிப்பேட்டில் சுருக்கமாக எழுதி வைத்துவிட்டு நீண்ட நாட்களின் பின்னர் கதைகளாக விரித்து எழுதுவார். பேதமனமும், அபேதமனமும் பின்னிப்பிணைந்து கதைகளைச் சிருஷ்டிக்கத் தேவையான படைப்பாக்க நேரத்தை சேமிக்க நாட்டம் கொண்டவர். அந்த இயல்பினாலே குறைவாக எழுதியவர். பல கதைகளை எழுத அதிக நாட்கள் எடுத்துக் கொண்டவர். அழகிரிசாமி மனிதநேயத்தைத் தன் படைப்புகளில் அதிகம் எழுதியவர். ‘ராஜா வந்திருக்கிறார்’ கதையில் வரும் அன்னை தாயம்மாளுக்கும், பாலம்மாள் கதையில் வரும் பாலம்மாளுக்கும், அழகம்மாள்… Read More »