Category Archives: ஈழம்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் – பதின்ம வயதின் அற அலைச்சல்

Post-war காலப் பகுதியில் வெளியாகிய பல்வேறு கதைகள் பெரும்பாலும் ஒத்த தன்மைகளைக் கொண்டிருப்பதை அவதானிக்க இயலும். பெரும்பாலான கதைகள் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் நாயகன் முன்னாள் போராளி ஒருவரைத் திருமணம் செய்ய இலங்கைக்கு வருவார்; ஆனால், அவ்வீட்டுக்கு அருகிலிருக்கும் உள்ளூர்வாசியொருவர் பொறாமையில் அம்முன்னாள் போராளியைப்பற்றித் தவறாகச் சொல்ல நாயகன் அதனை நம்பி விட்டுவிட்டு மீண்டும் தான் வாழும் நாட்டுக்குச் செல்வார். (புலம்பெயர்ந்த நாம் உதவிசெய்ய வந்தாலும் உள்ளூர் வாசிகள் விடுவதில்லை என்ற தொனி அதிலிருக்கும்) இல்லையெனில் முன்னாள்… Read More »

மொழி மானமும் தமிழ் மனநிலையும்!

எம் இனம் சார்ந்து இருக்கும் அக்கறையில் எனக்குப் பல கேள்விகள் எழுவதுண்டு. முக்கியமாக எம் இனத்துக்கு இருக்கும் தாழ்வுச் சிக்கல். அந்தத் தாழ்வுச் சிக்கலை மறைக்க எம்மிடம் எம் இனம் சார்ந்து உருவாக்கப்பட்ட வரலாற்று ரீதியான பாரிய விம்பங்கள் அறிவுரீதியாக யோசிப்பதை எப்பொழுதும் இடையூறு செய்கின்றன. அதன் வெற்றுப் பெருமிதங்கள் பேசுவதிலே பெரும்பாலான காலத்தைக் கடத்தியிருக்கிறோம். உலமாகயமாக்களில் அல்லது இன்னுமொரு இனத்தின் திட்டமிட்ட பண்பாட்டு அழிப்பில் எமது தமிழ் மொழியும் அடையாளங்களும் சிக்கியிருக்கும் பொழுது அதனை எப்படிப்… Read More »

மதிப்பீடுகளின் வீழ்ச்சி – ஈழத்து இலக்கிய விமர்சனப்போக்குகள் பற்றிய சில புரிதல்கள்

ஆகஸ்ட் மாதம் வெளியாகிய  தடம் மூன்றாவது இதழில் ஜெயமோகனின் நேர்காணல் குறித்தான விவாதங்களில் மிக அதிர்ச்சி தரக்கூடிய நிலைத்தகவல்கள் சிலவற்றை முகநூலில் கண்ணுற்றேன். ‘தமிழக இலக்கியவாதிகள் போனால் போகட்டும் என்று ஷோபாசக்தி, அ.முத்துலிங்கம் என்று ஓரிருவரை அங்கீகரித்தவர்கள், இன்று சயந்தன், குணா கவியழகன், யோ. கர்ணன், தமிழ்நதி என்று வெளிக்கிளம்பி வரும் படைப்பாளிகளை ஓர் ஒவ்வாமையோடு பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஜெயமோகனுக்கு நன்கு தெரியும், இன்றைக்கு ஈழத்துப் படைப்பாளிகள் உருவாக்கக் கூடிய படைப்புகளை, அவை காட்டும் உலகத்தைத் தம்மால்… Read More »

தலைமுறை கடந்த குறிப்பு

அனுபவக்குறிப்பு யாழ்.பொதுசன நூலகம் கச்சேரிக்கு முன்னுள்ள பரந்த கட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமாகியது. மகோகனி மரங்கள் சூழ, மிக அமைதியான சூழலில் நூலகம் இயங்கியது. அப்போது நான் சிறுவர் பகுதியில் அதிகநேரம் செலவழிப்பேன். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆங்கிலத் திரைப்படங்கள் ஒன்றை ஒவ்வொரு வாரமும் காட்சிப்படுத்துவார்கள். ஜுரசிக் பார்க் என்ற முதலாவது ஆங்கிலப்படத்தை நூலகத்தில் பார்த்த அனுபவம் இன்னும் எனக்கு நினைவில் இருக்கின்றது. நிறையச் சிறுவர்களைப் போலவே சிறுவர் பகுதியிலுள்ள கொமிக்ஸ் புத்தகங்கள் வாசிப்புத் தொடக்கத்தை எனக்கும் கொடுத்தது. மாயாவியின்… Read More »

கொல்வதெழுதல் 90 – அலைக்கழிப்பின் நாட்கள்

கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஆர்.எம்.நெளஸாத் எழுதிய புதினம் ‘கொல்வதெழுதல் 90’. போர்க்காலத்தில் சாதாரண கிராமத்து இசுலாமிய இளைஞன் ஒருவனின் கதை. தொண்ணூறுகளில் கதை நிகழ்கின்றது. நாலா பக்கமும் இடம்பெறும் இன முரண்பாடுகள், மிகச்சிறிய சமூகமான இசுலாமிய சமூகத்தை அழுத்திப்பிசைகிறது. இலங்கையில் வசிக்கும் இசுலாமிய சமூகத்தின் வாழ்வியல் நெருக்கடிகளையும், அச்சமூகத்தின் கடந்தகால வரலாறுகளையும் இலக்கியப் பதிவாக எழுதப்படுவதில்லை என்ற பரிதவிப்பு இசுலாமிய சமூகத்துக்கு தொடர்ச்சியாக இருந்துவருவதுண்டு. அப்பரிதவிப்பை ஓரளவுக்கு குறைத்துவைத்திருக்கின்ற படைப்பாக்கமாக கொல்வதெழுதல் 90 நாவலைக் கருதலாம். கிழக்கிலங்கையிலிருக்கும் பள்ளிமுனைக்கிராமம்தான்… Read More »

குடை நிழல்

தி ஹிந்து நாளிதழில் மண்குதிரை எழுதிய “குடை நிழல்” குறுநாவலின் மதிப்பீட்டை வாசித்துவிட்டு, அக்குறுநாவலை மிகச்சமீபத்தில்தான் வாசித்தேன். தெளிவத்தை ஜோசப் மிகமுக்கிய கதை சொல்லி என்பதில் சந்தேகமேயில்லை. மிக நேரடியான மொழியில் சொல்லிவிட்டுச் செல்லும் சம்பவ சித்தரிப்புகள். இத்தனை நேரடியான யதார்த்தவாத சித்தரிப்பு தேவையா என்றால் அதுவே இக்குறுநாவலின் அழகியலாகவும் பலமாகவும் இருந்துவிடுகின்றது. கைது விசாரணைகள் என்று வரும்போது நாயகனுக்கு நேரும் அனுபவத்தைவிட அவன் கேள்விப்பட்ட அனுபவம்தான் இம்சிக்க வைகின்றது. எத்தனை எளிமையாக ஒருவனை வீழ்த்த முடிகின்றது.… Read More »