பிரித் நூலின் தரிசனம்

அனோஜன்,

யானை சிறுகதை வாசித்தேன்.

கடைசியிலுள்ள பிரித் நூலின் தரிசனம் திறப்பை அளித்தது.

ஆங்கிலத்தில் மாற்றியதை இணைத்துள்ளேன்.

 

அன்புடன்

சேது வேலுமணி

சென்னை

 

பிரித் நூலைப் பற்றி மேலும் தகவல் தெரியப்படுத்தவும்.

நன்றி.

 ***

கடந்த காலத்தில் நாம் இருந்தோம்.

இப்போது அதில் இல்லை.

எதிர்காலத்தில் நாம் இருக்கலாம்.

ஆனால் இந்தக் கணத்தில் அதிலும் இல்லை.

நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கிறோம்;

இறந்தகாலமும் எதிர்காலமும் இல்லை.

அதோடு நிகழ்காலமும் இல்லை.

நிகழ்காலம் என்பது நாம் உணர்ந்து கொள்ளும் ஒரு தருணம் மட்டுமே

அடுத்த கணமே அது இறந்து போன ஒரு கணம்.

எதிர்காலம் நம்முன்னால் தேய்ந்து செல்வதை உணரும் ஒரு வெளிப்பாட்டுத் தருணமே நிகழ்காலம்.

அதை ஒரு நிலையின்மையாக மட்டுமே உணரலாம்.

அடுத்தடுத்த இருகணங்களிலும் மனிதன் ஒருவனாக இருக்க முடிவதில்லை.

பாலி மொழியில் பிரித் நூலிலிருந்து…

We were in the past.

Now it’s not there.

We may be in the future.

But this is not the moment.

We are only in real time.

There is no dead time and no future.

And there is no real time.

The real time is a only a moment we realize.

The next moment it was a moment of death.

The present moment is the time when the reaction will feel weary before us.

It can only be felt as a conditions.

In the next two moments man cannot be one.

In the book Pirith – Bali language…

 

அன்புள்ள செந்தூரமகாலிங்கம்,

மிக்க நன்றி, பிரித் தூல் பெளத்த வழிபாட்டில் பிக்குகளால் ஓதிக் கைகட்டில் கட்டப்படும் வெண்ணிற நூல். ஒற்றுமையையும், சமத்துவத்தையும், அளவிலா அன்பையும் அது வலியுறுத்தும். நான் சார்ந்த சமூகத்தில் இதுவொரு வழக்கமாக இருந்துவருகிறது. தமிழர்கள் உற்பட விகாரைகுச் செல்லும்போது, பிரித் நூல் கட்டுவது வழமை. பெளத்த பேரினவாதம் என்பது வேறு பெளத்த மெய்யியல் என்பது வேறு.

உங்கள் மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது.

அன்புடன்

அனோஜன் பாலகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *