Daily Archives: 9th March 2016

நல்ல துறவி எப்போதும் துறவியாக இருப்பதில்லை

ஆனந்தபுர பொக்ஸ் சண்டை விடுதலைப்புலிகளின் இறுதி எத்தனமாகக் கொள்ளப்படக் கூடியது. அத்தோல்வி போரை முள்ளிவாய்கால்வரை இழுத்துச்சென்று, பெரும் மானுட பேரழிவுடன் கொடூரமாக முடித்து வைத்தது. அந்த அழிவின் பின்னர் போர் ஓய்வுக்கு வந்துவிட்டதாகக் கருதினாலும் போரின் பின்னாலிருக்கும் மானுடவாழ்வின் அவலங்களை காய்ந்த இரத்தக்கறையோடு கலந்திருக்கும் சொல்லமுடியாத இரகசிய வலிகளின் முனகல்களையும் ஷோபாசக்தியின் BOX – கதைப் புத்தகம் பேச விளைந்திருக்கின்றது. ஷோபாவின் கொரில்லா(2001), ம்(2004) வரிசையோடு மூன்றாவதாக நீண்ட இடைவெளிக்குப்பிற்பாடு இணைந்திருக்கும் நாவல் Box கதைப் புத்தகம்(2015).… Read More »